கடந்த 2014ம் ஆண்டு விஜயின் ஜில்லா படமும் அஜித்தின் வீரம் படமும் ஒரே நாளில் வெளியானது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியானது.
இந்த இரண்டு படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் எந்த படம் அதிகம் வசூல் செய்தது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை துணிவு ஒரு நாளில் ரூ.3.75 கோடி வசூல் செய்துள்ளது. வாரிசு ரூ.3.95 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் துணிவு ரூ.19 கோடி வசூலித்துள்ளது. வாரிசு ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
உலக அளவில் முதல் நாள் வசூலில் வாரிசு ரூ.26.5 கோடியும் துணிவு ரூ.26 கோடியும் வசூல் செய்துள்ளது.