விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்துள்ள துணிவு படமும் நாளை வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது சிறப்பு ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கபட்டு உள்ளது.