வாரிசு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி லீக்! ரசிகர்கள் அதிர்ச்சி!

வாரிசு படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, அப்படம் தொடர்பான பல்வேறு புகைப்படங்களும், வீடியோக்களும், இணையத்தில் வெளியாகி வந்தன. இது படக்குழுவினருக்கும், விஜயின் ரசிகர்களுக்கும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், வாரிசு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையின் மீது, லாரிகள் ஏறுவதைப் போன்ற காட்சிகள், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.