Connect with us

Raj News Tamil

உலக அளவில் 300 கோடி வசூல் செய்த விஜயின் வாரிசு?

சினிமா

உலக அளவில் 300 கோடி வசூல் செய்த விஜயின் வாரிசு?

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளில் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 11 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் 16 நாட்களில் ரூ.275.69 வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ.300 கோடியை எட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top