ஒரே நேரத்தில் 5 சர்ச்சைகளில் வாரிசு!

விஜயின் திரைப்படம் வெளியாவதாக இருந்தாலே, பிரச்சனைகள் வருவது வழக்கம் தான். ஆனால், தற்போது உருவாகி உள்ள வாரிசு படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு, ஒரே வாரத்தில், 5 பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

முதல் பிரச்சனை என்னவென்றால், ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு சிக்கல் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக, துணிவு படத்தின் அளவிற்கு, வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காது என்று கொழுத்திப் போடப்பட்டது.

பின்னர், விஜய் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காலில், ரசிகர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். இதுவும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விஜயின் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது, யானைகளை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தியது என்று தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டது. இவ்வாறு, ஒரே வாரத்திற்குள்ளாக, 5 சர்ச்சைகளில் தளபதி விஜய் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.