இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும் மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் இன்று ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ரத்னா, கோமதி மற்றும் சீர்காழி சிவகுமார் ஆகிய மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் தியேட்டர் வாசலிருந்து மண்டியிட்டு வந்து விஜய் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.