விஜயின் வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படும்..!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகிறது.

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் காட்சி எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு ஒரு மணிக்கு முதல் காட்சியை திரையிட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த தகவலை திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பகுதிகளில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நள்ளிரவு காட்சிகள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.