வெளிநாடுகளில் வாரிசு படத்திற்கான முன் பதிவு தொடங்கியது..!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், தற்போது பிரமோசன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினியின் கபாலி, கமலின் விக்ரம் படங்களை போல விஜயின் வாரிசு படத்திற்கும் மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டு வருகிறது.

படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை அகிம்சா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் பல பகுதிகளில் வாரிசு முன்பதிவு தொடங்கி விட்டது. பிரிட்டனில் 100 பகுதிகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் விறுவிறுப்பாக டிக்கெட்டுகள் பதிவாகி வருகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.