தளபதி விஜய் நடிப்பில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான 20 நிமிடங்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.