வாரிசு தயாரிப்பாளர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்! உயிரிழந்த முக்கிய நபர்!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் வாரிசு.

இந்த படத்தை, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். இந்நிலையில், இவரது குடும்பத்தில் துக்க சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, இவருக்கு ஷியாம் சுந்தர் ரெட்டி என்ற தந்தை உள்ளார். 80 வயதாகும் இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி, இன்று காலமானார். இந்த தகவலை அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News