வாரிசு படப்பிடிப்பு தளத்தில் மாஸ் காட்டிய விஜய்!

பீஸ்ட் படத்தின் பெரும் தோல்விக்கு பிறகு, தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த வம்சி என்ற இயக்குநர் தான், இந்த படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தின் ஷீட்டிங் ஐதராபாத்தில் தொடங்கி, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த தளபதியின் ரசிகர்கள், அவரை காண்பதற்காக ஷீட்டிங் நடக்கும் இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர். இதன்காரணமாக, அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர்களை காண்பதற்கு, விஜயே நேரடியாக வந்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.