வாரிசு சிங்கில் இந்த பாடலின் காப்பியா?

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின், பர்ஸ்ட் சிங்கில் புரோமோ நேற்று வெளியானது. ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்று தொடங்கும் இந்த பாடல் அருமையாக உள்ளது என்று தளபதியின் ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடல், வேறொரு பாடலின் Copy என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது, தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில், ஜு மந்திரிக்கா.. மந்திரிக்கா என்று பாடல் இடம்பெற்றிருக்கும்.

இந்த பாடலின் மெட்டை போலவே, வாரிசு பர்ஸ்ட் சிங்கில் இருப்பதாக மீம்ஸ் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். முழு பாடலும் வந்த பிறகுதான், என்ன சங்கதி என்பது அனைவருக்கும் தெரியவரும்..