பீஸ்ட் பட யுக்தியை கையாளும் வாரிசு! Work ஆகுமா?

வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்கை ஆக்கிரமிக்க உள்ளது.

இந்நிலையில், இந்த படம், பீஸ்ட் பட யுக்தியை கையாள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜயின் பீஸ்ட் திரைப்படம், தமிழில் வெளியான நேரத்திலேயே, இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அதே போன்று, வாரிசு படமும், தமிழில் வெளியாகும் நேரத்திலேயே, இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாம். இந்த யுக்தி, வாரிசு படக்குழுவிற்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..