தெலுங்கு பிரச்சனை முடிந்தது.. புதிய பிரச்சனை வந்தது.. கடுப்பில் வாரிசு டீம்!

வாரிசு திரைப்படம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகத சூழல், சமீபத்தில் இருந்தது. தற்போது, அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தகவல் பரவியது.

இந்நிலையில், வாரிசு படக்குழுவிற்கு, இன்னொரு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, வாரிசு படப்பிடிப்பில், உரிய அனுமதியின்றி, யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், யானைகளை வாகனத்தில் அழைத்து வருவதற்கான ஆவணத்தை மட்டுமே, படக்குழுவினர் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

ஆனால், விரைவில் இதுதொடர்பான ஆவணத்தை சமர்பிப்போம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனராம். இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.