தளபதி ரசிகர்களுக்கு கவலை வேண்டாம்! செம அப்டேட்!

விஜயின் வாரிசு திரைப்படம், ஆந்திரா , தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் வெளியாவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த பிரச்சனை சரியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வாரிசு திரைப்படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளதாம். இதுதொடர்பான தகவல், விஜய் ரசிகர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.