வெளியான வாரிசு 3-வது பாடல்..! உருகிய ரசிகர்கள்..!

வம்சி இயக்கத்தில், விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின், 2-பாடல்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடகி சித்ரா, 3-வது பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் ஆழாமான வரியில் உருவாகியுள்ள இப்பாடல், அம்மா செண்டிமென்டில் கண்ணீரை வர வைத்துள்ளது.

‘ஆராரிராரோ கேட்குதம்மா’ என்று தொடங்கும் இந்த பாடல் இதுவரை 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.