வாரிசா..? துணிவா..? ”டாஸ் போட்ட” தியேட்டர் நிர்வாகம்..!

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் முன்பதிவு தொடங்கி, முயல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான தியேட்டர் ஒதுக்குவதிலும், பேனர்கள் போன்ற விளம்பர பதாகைகள் வைப்பதிலும் பெரும் சலசலப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியது.

அந்தவகையில் அந்தமானில் உள்ள ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் உள்ள 3-திரைகளில், துணிவுக்கு முதல் திரையும், வாரிசுக்கு 2-வது திரையும் ஒதுக்கப்பட்டது. ஆனால் 3-வது திரை யாருக்கு என போட்டி ஏற்பட்ட நிலையில், தியேட்டர் நிற்வாகம் விஜய், அஜித் ரசிகர்கள் முன்னிலையில் டாஸ் போட்டு முடிவு செய்தது. இறுதியாக துணிவு படம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News