துணிவு படத்தை பார்த்து பயந்த விஜய் – பிரபல நடிகர்

துணிவு படமும், வாரிசு படமும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த படம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் பலரும், எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகரும், இயக்குநருமான பிரவீன் காந்தி, விஜய் ரசிகர்களை சந்தித்தது குறித்து கிண்டலாக சமீபத்தில் பேசியுள்ளார்.

அதாவது, திடீரென ரசிகர்களின் மீது விஜய் இவ்வளவு கனிவு காட்டுவதற்கு, துணிவு திரைப்படம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், விஜய் அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுவதாகவே, இந்த பேச்சு அமைந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.