துணிவு vs வாரிசு UK-வில் அதிக புக்கிங் எது தெரியுமா..?

அஜித்குமார் நடிப்பில் துணிவும், விஜய் நடிப்பில் வாரிசும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இறுதிகட்ட படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கும் இப்படங்களின், எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

துணிவு படத்தின் பாடல்கள் வெளியீடு ஒரு பக்கம், விஜய் படத்தின் இசை வெளியீடு ஒரு பக்கம் என மாறிமாறி இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

மேலும் ப்ரீமியம் டிக்கெட் புக்கிங் பணிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் UK-வில் 2-படங்களின் புக்கிங் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அங்கு துணிவு படத்தை விட வாரிசு படத்தின் புக்கிங் அதிகம் விற்பனையாகி வருகிறது என கூறப்படுகிறது.