Connect with us

Raj News Tamil

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே மாபெரும் வெற்றியடைவது உறுதி ! முதல் மந்திாியாக வாய்ப்பு ?

இந்தியா

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே மாபெரும் வெற்றியடைவது உறுதி ! முதல் மந்திாியாக வாய்ப்பு ?

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநில சட்டமன்ற தோ்தலில் வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் , பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றி முன்னிலை வகித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அதாவது, அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல் மந்திாியுமான ராஜசிந்தியா, தான் போட்டியிட்ட ஜல்ராபாதான் தொகுதியிலும் , 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.இவரே முதல் மந்திாியாகவும் தோ்ந்தெடுக்க படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜல்ராபதான் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு;

வசுந்தரா ராஜே (பாஜக)- 1,38,831

ராம்லால் (காங்கிரஸ்)- 85,638

மகாசத் (பகுஜன் சமாஜ் கட்சி )-3431

பவன் குமாா் மெஹா் (இந்திய மக்கள் பசுமை கட்சி ) – 2177.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top