அடித்தே கொல்லப்பட்ட பிரபல நடிகை! ஆற்றில் வீசப்பட்ட உடல்!

பல்வேறு இந்தி படங்களில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை வீணா கபூர். 74 வயதாகும் இவர், மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கும், இவரது மூத்த மகன் சச்சின் கபூருக்கும் இடையே, கடந்த சில வருடங்களாக, கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று, சொத்து குறித்து, தனது தாயிடம், சச்சின் கபூர் பிரச்சனை செய்துள்ளார். இதில், ஏற்பட்ட பிரச்சனையில், அவரை கொலை செய்த சச்சின், உடலை ஆற்றில் வீசியுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சச்சின் கபூரையும், அவருக்கு உடந்தையாக இருந்த வீட்டு வேலையாளையும், கைது செய்தனர். பழம்பெரும் நடிகையை, அவரது மகனே கொலை செய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.