விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் வீர தீர சூரன்.
எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த மார்ச் 27-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இப்படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் குறித்து, புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 9 நாட்களில், 56 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.