பன்னையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர், தற்போது விக்ரமை வைத்து, வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.