எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படம், ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை 1.5 கோடி ரூபாயை, ப்ரீ புக்கிங்கில் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.
உச்ச நட்சத்திரத்தின் படத்திற்கு குறைவான அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்திருப்பதையே காட்டுகிறது. ஆனால், ரிலீஸ்-க்கு பிறகு, நல்ல விமர்சனங்கள் கிடைத்தால், இப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.