எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம், வரும் ஜனவரி 24-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று, முன்பு கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அடுத்த வாரமே, அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆவதால், வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று, படக்குழுவினர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டது.
இவ்வாறு பல்வேறு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தெரியவந்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 27-ஆம் தேதி அன்று, இப்படத்தை ரிலீஸ் செய்ய, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.