வாகன விபத்து: 8 மாத கர்பிணி பெண் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே இருசக்கர வாகன விபத்தில் சென்ற 8 மாத கர்பிணியான பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி உஷா . வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு பணிமுடித்து காவல் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த உஷா, அம்மாண்டிவிளை சந்திப்பு அருகே எதிரே வந்த பைக் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். 8 மாத கர்பிணியான அவரை அக்கம்பகத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உஷா மரணமடைந்தார். இந்த விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டி வந்த அபிஷேக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே போல் புதுக்கோட்டை விராமலி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.