அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில், பல ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் பவதாரிணி.
இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சை பலன் இன்றி, சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவு, இளையராஜா குடும்பத்தினர் மத்தியிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, பவதாரிணியுடன், கடைசியாக எடுத்திருந்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.