கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. சமீபத்தில் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு திரைப்படம், சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது நாகசைதன்யாவின் 22-வது படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு கஸ்டடி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி இப்படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 10-ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் பாடலாசிரியராக அறிமுகமாகும் ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.