தி கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகரா?

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜயை வைத்து, தி கோட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், அடுத்த வாரம் வியாழக் கிழமை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு பிரபல நடிகர் என்று தகவல் கசிந்துள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தந்தை கதாபாத்திரத்தில் ரஜினியையும், மகன் கதாபாத்திரத்தில் தனுஷையும் வைத்து தான், இப்படத்தை இயக்க வெங்கட் பிரபு முடிவு செய்து வைத்திருந்தாராம்.

ஆனால், சில காரணங்களால், அப்போது படத்தை தொடங்க முடியாமல் இருந்துள்ளதாம்.

அதன்பிறகு தான், இரண்டு கதாபாத்திரங்களிலும், விஜயை வைத்தே, டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் படத்தை இயக்கலாம் என்று வெங்கட் பிரபுவுக்கு தோன்றியதாம்.

RELATED ARTICLES

Recent News