வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
ஆனால், கிட்டதட்ட 7 ஆண்டுகள் ஆகியும், இதன் இரண்டாம் பாகம் உருவாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான, அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது என்று, வெற்றிமாறன் முடிவு செய்துவிட்டாராம். வடசென்னையில் வசிக்கும் மக்கள், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.