தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய பெரும்பாலான படங்களில், துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் சரண்ராஜ்.
இவர் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், பழனியப்பன் என்பவர் தான் இந்த விபத்தை செய்துள்ளார் என்பதும், அவர் பல்வேறு படங்களில், துணை நடிகராக நடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதுமட்டுமின்றி, மது அருந்துவிட்டு, அவர் காரை இயக்கியுள்ளார் என்றும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெற்றிமாறனின் துணை இயக்குநர் உயிரிழந்துள்ள சம்பவம், சினிமா வட்டாரங்களில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.