80-ஸ் மற்றும் 90-ஸ் காலங்களில், ஒரு திரைப்படம், 100 நாட்கள், 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடி, மிகப்பெரிய வெற்றி பெற்றன.
ஆனால், தற்போது வரும் திரைப்படங்கள், இரண்டு வாரங்கள் திரையரங்குகளில் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை உள்ளது. இதனால், திரையரங்கத்தை நடத்த முடியாமல், அதன் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சினிமாவை காப்பாற்றுவதற்கான வழியை, இயக்குநர் வெற்றிமாறன் தற்போது கூறியுள்ளார்.
அதாவது, “நடிகர்கள் தங்களது சம்பளத்தை, 40 சதவீதம் குறைத்துக் கொண்டு நடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான், சினிமாவை காப்பாற்ற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.