இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துக் கொண்ட வட்டமேஜை நேர்காணல், சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு, கிருத்திகா உதயநிதி, அட்டகத்தி தினேஷ், சாய் அபயங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது, பா.ரஞ்சித்தின் அட்டகத்தி திரைப்படம், எவ்வாறு ஞானவேல் ராஜாவை கவர்ந்தது என்று, வெங்கட் பிரபு பேசியுள்ளார். அதாவது, “அட்டகத்தி திரைப்படம் நீண்ட நாட்களாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதன்பிறகு, வெற்றிமாறனும், ஞானவேல் ராஜாவும், ஒரு நாள் படத்தை பார்த்தனர்.
அப்போது, படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்துவிட்டு, வெற்றிமாறன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே இருந்தார். இவரது சிரிப்பு தான், ஞானவேல் ராஜாவுக்கு, பெரிய நம்பிக்கை கொடுத்தது. வெற்றிமாறன் சிரித்தே அந்த படத்தை விற்பனை செய்துவிட்டார்” என்று அந்த வட்டமேஜை நேர்காணலில் பேசியுள்ளார்கள்.