திரும்பவும் முதல்ல இருந்தா.., அதிர்ச்சி கொடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் 2-ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இதனால், படத்தின் பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த வெற்றிமாறன், மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதாவது, எடிட் செய்யப்பட்ட படத்தை வெற்றிமாறன் பார்த்துள்ளாராம்.

அப்போது, சில காட்சிகள் வேண்டும் என்பதை உணர்ந்த அவர், ஒரு வாரம் ஷூட்டிங் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ஒரு படத்திற்கு இவ்வளவு நாள் ஷூட்டிங் நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News