எளிய மக்களின் கதையை அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவர், தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பிரபல யு டுயூப் சேனலுக்கு வெற்றிமாறன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், திரௌபதி போன்ற படங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், திரௌபதி மாதிரி படங்கள் வருவது தவறு கிடையாது. இவ்வாறு எடுக்கக் கூடாது என்று தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
அந்த மாதிரியான படங்கள் வந்தபிறகு, மக்கள் அதனை விவாதித்து, எது சரி, எது தவறு என்பதை தெரிந்துக்கொள்ளட்டும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கர்ணன் மாதிரியான படங்கள் வருவதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போன்று திரௌபதி மாதிரி படங்கள் வருவதற்கும் உரிமை உள்ளது என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.