10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பரிசு கொடுத்து கெளரவிக்கும் விழா, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில், தளபதி விஜய் கலந்துக் கொண்டு, மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அசுரன் பட வசனம் ஒன்றை பேசியிருந்தார். மேலும், “அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரை மாணவர்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்” என்றும் விஜய் அந்த விழாவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், விஜயின் இந்த பேச்சு குறித்து, அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், சினிமாவில் சொல்லும் கருத்துக்கள், முக்கியமான நபர்களை சென்றடையும்போது, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், நமது வரலாறுகளை அறிந்துக் கொள்ள, அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோர்களோடு சேர்த்து, அறிஞர் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.