சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை 2. நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், விடுதலை முதல் பாகத்தின் Extended Cut, தியேட்டர் வெர்ஷனை விட கூடுதலாக 10 நிமிடங்களுடன் ரிலீஸ் ஆனது.
ஆனால், விடுதலை 2-ஆம் பாகத்தின் Extended Cut, கூடுதலாக 1 மணி நேரத்துடன் ரிலீஸ் ஆக உள்ளது என்று தெரிவித்தார். இதன்மூலம் கதாபாத்திரங்களின் தன்மை, இன்னும் எளிமையாக புரியும் என்றும், அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.