பொல்லாதவன் படத்தின் மூலம், தனுஷ்-ம், வெற்றிமாறனும் கூட்டணி அமைத்திருந்தனர். அன்று தொடங்கிய இந்த வெற்றிக் கூட்டணி, ஆடுகளம், வடசென்னை, அசுரன் என்று தொடர்ந்து நீண்டுக் கொண்டே இருந்தது.
இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி, மீண்டும் 5-வது முறையாக இணைய உள்ளது. அதாவது, விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், வெற்றிமாறனின் 9-வது படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகர் தனுஷ் தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது, வாடிவாசல் படத்திற்கு பிறகு, இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தெரிகிறது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.