சூரி, விஜய்சேதுபதி ஆகியோரை வைத்து, விடுதலை 1 மற்றும் 2-ஆம் பாகங்களை வெற்றிமாறன் இயக்கி முடித்திருக்கிறார். இதன்பிறகு, நடிகர் சூர்யாவின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சூர்யா வேறொரு படத்தில் பிசியாக நடிப்பதால், அவருடன் இணைய முடியாமல் இருந்தது. இதனால், எந்த நடிகருடன் அவர் கூட்டணி சேர்வார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், இவர் அடுத்ததாக, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர்.