கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியிருந்த இப்படத்தில், விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
முதல் பாகம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்திற்கான பாதி காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிவிடும் என்று ரசிகர்கள் கருதினார்கள்.
ஆனால், காடுகளிலும், மலைகளிலும் ஷீட்டிங் நடத்தப்பட்டு வருவதால், தொடர் காலதாதம் ஆகிவருகிறது.
இவ்வாறு இருக்க, ஜனவரி மாதமே படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், இன்னும் ஒரு மாத காலம் ஷூட்டிங் நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.