பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். இவரது தாயாரான மேகலா சித்திரவேலும் தமிழ் இலக்கிய உலகில் சிறந்த படைப்புக்களை அளித்துள்ளார்.
இந்நிலையில் இவர் எம்.ஜி.ஆர் பாடல்களை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த முனைவர் பட்டம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையால் வழங்கப்பட்டது. மேலும், இவ்விழாவில் வெற்றிமாறன் கலந்துக்கொண்டு கைதட்டி தனது தாயாரை ஊக்குவித்தார்.