கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.