வேட்டையன் படத்தின் 7 நாள் வசூல்!

போலி என்கவுண்டரை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன்.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என்று பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார்.

கடந்த 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 7 நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, 275 கோடி ரூபாய் வரை, இப்படம் வசூல் செய்துள்ளது. 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம், தற்போது பட்ஜெட்டை தாண்டி வசூலித்திருப்பதன் மூலம், மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News