Connect with us

Raj News Tamil

அது கிராபிக்ஸ் இல்ல? வேட்டையன் டீசரில் கலக்கிய ரஜினி!

சினிமா

அது கிராபிக்ஸ் இல்ல? வேட்டையன் டீசரில் கலக்கிய ரஜினி!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தின் டைட்டில் டீசர், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த டீசரின் இறுதியில், கூலிங் கிளாஸ் ஒன்றை, ரஜினி தூக்கி போடுவது போன்றும், அது சரியாக அவரது கண்களில் ஒட்டிக் கொள்வது போன்றும், காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இதனை பார்த்த ரசிகர்கள், அது கிராபிக்ஸ் காட்சி என்று நினைத்திருந்தனர். ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, அது உண்மையாகவே ரஜினி செய்துள்ளாராம்.

அதாவது, அந்த கூலிங் கிளாஸ் மேக்னடிக் அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சரியான இடத்தில் கிளாசை தூக்கிப்போட்டால், அது சரியாக Frame-ல் ஒட்டிக் கொள்ளும் வகையில், டிசைன் பண்ணியுள்ளார்களாம். இதனை அறிந்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top