Connect with us

Raj News Tamil

வேட்டையை தள்ளி வைத்த வேட்டையன் – ஏன்? என்ன காரணம்?

சினிமா

வேட்டையை தள்ளி வைத்த வேட்டையன் – ஏன்? என்ன காரணம்?

ஜெயிலர் படத்திற்கு பிறகு, ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும், அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் ஷீட்டிங், கேப்டன் விஜயகாந்தின் மரணத்தால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பிறகு, இப்படத்தின் ஷீட்டிங், மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தை, கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடலாம் என்று, படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை அல்லது தீபாவளி விடுமுறையை கணக்கில் வைத்து தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top