நடிகர் அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணிவு படத்துக்குப் பின் நடிகர் அஜித்குமார் நடிப்பில் “விடா முயற்சி” படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து திட்டமிட்டபடி விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் அமைந்துள்ள அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் விடா முயற்சி ஷூட்டிங்கில் மாரடைப்பு காரணமாக கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.