Connect with us

Raj News Tamil

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்.. இந்த படத்தின் காப்பியா?

சினிமா

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்.. இந்த படத்தின் காப்பியா?

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை, மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட் எதுவும் நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலையில், நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, இந்த போஸ்டர் ஏற்கனவே வெளியான அஜித் படத்தில் இருந்தே உருவப்பட்டது என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, அஜித்தின் விவேகம், வலிமை ஆகிய படங்களிலும், இதே மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் வெளியிடப்பட்டிருந்தது. இதனை வைத்து தான், இந்த போஸ்டரை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top