மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படக்குழுவினர் போட்ட திட்டம், தற்போது தவிடுபொடியாகியுள்ளதாம். அதாவது, விடாமுயற்சி படத்தை, ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய, படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்களாம்.
ஆனால், இதனை அறிந்த குட் பேட் அக்லி படக்குழு, அந்த தேதியில், தங்களது படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துவிட்டார்களாம். அதனால் தான் படத்தின் ரிலீஸ் தேதியை, அவசர அவசரமாக அறிவித்துவிட்டார்களாம். இதனை வைத்து பார்க்கும்போது, விடாமுயற்சி திரைப்படம் தற்போதைக்கு ரிலீஸ் ஆகாது என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.