ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் விடாமுயற்சி! இதுதான் கெத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவரது திரைப்படங்கள் வெளியாகினால், திரையரங்குகளில் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும்.

அந்த வகையில், வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள விடாமுயற்சி படத்திற்கும், மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அதாவது, மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப்படத்தின் ப்ரீ புக்கிங், நேற்று முதல் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக ரசிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு, டிக்கெட்டுகளை புக் செய்து வந்தனர்.

இதன் விளைவாக, தமிழகத்தில் மட்டும், ப்ரீ புக்கிங்கில் 2.5 கோடி ரூபாயை, விடாமுயற்சி திரைப்படம் வசூலித்துள்ளதாம். மேலும், வெளிநாடுகளில் மட்டும், 3.5 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News