துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த திரைப்படம், இன்னும் முடியாமல் உள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று விசாரித்ததில், அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தின் ஷீட்டிங்கிற்கு, ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதாம்.
இதனால், நிதி நெருக்கடி ஏற்பட்டு தான், ஷீட்டிங் தாமதம் ஆகிறதாம். மேலும், மார்ச் மாதமே முடிய இருந்த ஷீட்டிங், மே மாதம் வரை இழுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும்போது, இப்படம் வரும் தீபாவளிக்கு தான் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.